×

”தேசிய பங்குச் சந்தைக்கு ரூ. 6 கோடி அபராதம்” ! – செபி அதிரடி!

சில நிறுவனங்களில் முன் அனுமதி பெறாமல் முதலீடு செய்தது தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு, செபி 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நாட்டின் பங்கு வர்த்தகத்தில் முக்கிய சந்தையாக தேசிய பங்கு சந்தை லிமிடெட் (என்எஸ்இ) நிறுவனம் கருதப்படுகிறது. இந்நிலையில், பங்கு வர்த்தகத்துடன் தொடர்பு இல்லாத, ஆறு நிறுவனங்களில் முன் அனுமதி இன்றி முதலீடு செய்தது தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு பங்குச்சந்தை ஒழுங்கு கட்டுப்பாட்டு அமைப்பான செபி 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
 

சில நிறுவனங்களில் முன் அனுமதி பெறாமல் முதலீடு செய்தது தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு, செபி 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நாட்டின் பங்கு வர்த்தகத்தில் முக்கிய சந்தையாக தேசிய பங்கு சந்தை லிமிடெட் (என்எஸ்இ) நிறுவனம் கருதப்படுகிறது. இந்நிலையில், பங்கு வர்த்தகத்துடன் தொடர்பு இல்லாத, ஆறு நிறுவனங்களில் முன் அனுமதி இன்றி முதலீடு செய்தது தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு பங்குச்சந்தை ஒழுங்கு கட்டுப்பாட்டு அமைப்பான செபி 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதன் படி பவர் எக்ஸ்சேஞ், கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்ஸ், என்எஸ்இஐடி, என்எஸ்டிஎல்-இ- கவர்னென்ஸ் இன்பிராஸ்டிரக்சர், ரீசவபிள்ஸ் எக்ஸ்சேஞ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களில் தேசிய பங்கு சந்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தேசிய பங்குசந்தை நிறுவனம் அதன் துணை நிறுவனமான என்எஸ்இ இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மூலமாக, செப்டம்பரில், இந்த 6 நிறுவனங்களில் 25 முதல் 100 சதவீத பங்குகளை கைப்பற்றும் வகையில் முதலீடுகளை செபியிடம் முன் அனுமதி பெறாமல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஆறு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

-எஸ். முத்துக்குமார்