×

ரூ.500 நோட்டு திரும்பபெறப்படமாட்டாது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 

2026 ஆம் ஆண்டுக்குள் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பபெறப்படும் என்று யூடியூபில் வெளியான தகவல் தவறானது என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

ஜூன் 2 ஆம் தேதி 'கேபிடல் டிவி' என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரூ.500 நோட்டுகள் படிப்படியாக செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. இது மக்களிடையே குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்திய நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.