×

சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை; மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

புதுச்சேரியில் சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை நடத்திய 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கடந்த 2017ம் ஆண்டு புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட ஆய்வில் 770 மாணவர்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டிருந்தது அம்பலமானது. இதனால் அந்த மாணவர்களை டிஸ்மிஸ் செய்யுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டதை, எதிர்த்து மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே புதுச்சேரி
 

புதுச்சேரியில் சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை நடத்திய 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கடந்த 2017ம் ஆண்டு புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட ஆய்வில் 770 மாணவர்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டிருந்தது அம்பலமானது. இதனால் அந்த மாணவர்களை டிஸ்மிஸ் செய்யுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டதை, எதிர்த்து மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே புதுச்சேரி அனுப்பிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில், 3 கல்லூரிகளில் விதிகளை மீறி சேர்ந்த 105 மாணவர்களை டிஸ்மிஸ் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன் படி, அந்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில், மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடத்திய 8 கல்லூரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என்றும் தீர்ப்பளித்தனர்.