முதல்முறையாக வேலைக்குச் சேர்ந்தோரின் PF கணக்கில் ரூ.15,000! மகிழ்ச்சியில் இளைஞர்கள்
Jun 19, 2026, 21:26 IST
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகையை பிரதமர் மோடி வழங்கினார்.
மத்திய அரசின் “வளர்ச்சி அடைந்த பாரதம் வேலைவாய்ப்புத் திட்டத்தை” பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், முதல்முறையாக வேலையில் சேர்ந்து பிஎப் கணக்கில் இணைந்த 15 லட்சம் ஊழியர்களுக்கு தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.2,400 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் இளைஞர்கள் இதன்மூலம் பயனடைவார்கள். டெல்லியில் இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் இளைஞர் சக்தி குறித்து உலகம் பேசுகிறது. அவர்களின் திறன்களை உலகம் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது” என்றார்.