×

தாமதமாக தொடங்கிய குடியரசு தின கொண்டாட்டம் : காரணம் இதுதானாம்!

பனிப்பொழிவு காரணாமாக டெல்லியில் குடியரசு தினவிழா தாமதமாக தொடங்கியுள்ளது. நாட்டின் 72 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ராஜபாதையில் மாநிலங்களின் ஊர்திகள் அணிவகுப்புகள் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் குடியரசு தினமானது வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டிராக்டர் பேரணி மற்றும் கொரோனா பரவலுக்கு மத்தியில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். அதன்
 

பனிப்பொழிவு காரணாமாக டெல்லியில் குடியரசு தினவிழா தாமதமாக தொடங்கியுள்ளது.

நாட்டின் 72 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ராஜபாதையில் மாநிலங்களின் ஊர்திகள் அணிவகுப்புகள் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் குடியரசு தினமானது வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டிராக்டர் பேரணி மற்றும் கொரோனா பரவலுக்கு மத்தியில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். அதன் பின்பு மோடி ராஜபாதை வருகிறார். இதை தொடர்ந்து ராஜபாதை வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றுகிறார். காலை 9.50 மணிக்கு விஜய் சவுகத்திலிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதற்காக 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தின விழா நிகழ்ச்சியை தொடர்ந்து விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறுவதால், பல முனைகளிலும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வழக்கமாக குடியரசு தினவிழா காலை 8மணிக்கே தொடங்கி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் அதிக பனிப்பொழிவு காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.