×

ரயில்களின் உணவு பெட்டிகள் நீக்க முடிவு- பயணிகள் அதிருப்தி

நீண்ட தூர ரயில்களில் உணவு தயாரிக்கும் பெட்டிகளை தவிர்ப்பதற்கு இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டியை இணைப்பதற்கு பதிலாக, பயணிகள் பெட்டியை இணைப்பதற்கு வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய ரயில்வேயின் இந்த முடிவுக்கு பயணிகள் தரப்பில் இருந்து அதிருப்தி எழுந்துள்ளது. இது தொடர்பான முன்வரைவில், உணவு தயாரிக்கும் பெட்டியை பராமரிக்க கூடுதல் செலவாகிறது என்றும், அந்தப் பெட்டியை தவிர்த்துவிட்டு கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத்
 

நீண்ட தூர ரயில்களில் உணவு தயாரிக்கும் பெட்டிகளை தவிர்ப்பதற்கு இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டியை இணைப்பதற்கு பதிலாக, பயணிகள் பெட்டியை இணைப்பதற்கு வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய ரயில்வேயின் இந்த முடிவுக்கு பயணிகள் தரப்பில் இருந்து அதிருப்தி எழுந்துள்ளது.

இது தொடர்பான முன்வரைவில், உணவு தயாரிக்கும் பெட்டியை பராமரிக்க கூடுதல் செலவாகிறது என்றும், அந்தப் பெட்டியை தவிர்த்துவிட்டு கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

நீண்ட தூர ரயில்களில் உணவு பெட்டியை குறைப்பதன் மூலம், நகரங்களுக்கு இடையில் விமான போக்குவரத்தை ஊக்குவிக்க முடியும் என காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக , நீண்ட தூர ரயில்களின் முதல் வகுப்பு பயணிகள் , விமான பயணத்தை தேர்வு செய்யலாம் என ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், இரண்டு நகரங்களுக்கு இடையிலான சேவைக்கு சில விமான நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட சேவைகளை அளிப்பதில்லை. ரயிலில் உணவு உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் நீண்ட தூரம் பயணிக்க விருப்பப்படுகின்றனர். இதன் காரணமாக உணவு பெட்டியை நிறுத்தினால், முதல் வகுப்பில் பயணம் செய்யும் ரயில் பயணிகள், விமான பயணங்களை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.