×

மும்பை தாராவி பகுதியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மகாராஷ்டிராவுக்கு ஆறுதல்

மும்பை: நாட்டின் மிகப் பெரிய காலனி பகுதியான மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆனால் மும்பை தாராவி பகுதியின் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவது மகாராஷ்டிராவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. புதிதாக 1,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. மும்பையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,702
 

மும்பை: நாட்டின் மிகப் பெரிய காலனி பகுதியான மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆனால் மும்பை தாராவி பகுதியின் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவது மகாராஷ்டிராவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. புதிதாக 1,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. மும்பையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,702 ஆக உயர்ந்துள்ளது.

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மும்பையில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் மிகப்பெரும் காலனி பகுதியான மும்பை தாராவியில் மொத்தம் 1,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 46.85 சதவீதம் பேர்  குணப்படுத்தப்பட்டு விட்டனர். தாராவியில் கொரோனா இறப்பு விகிதம் 3.71 சதவீதமாகும். அங்கு இதுவரை 71 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.