×

‘நமது கூட்டணி தான் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்’ – ராஷ்டிரிய ஜனதா தளம் ட்வீட்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சி தான் ஆட்சி அமைக்கும் என ராஷ்டிரிய ஜனதா தளம் பதிவிட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை தொடங்கியது. தற்போதைய முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரத்தின் படி பாஜக கூட்டணி 133 இடங்களிலும்,
 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சி தான் ஆட்சி அமைக்கும் என ராஷ்டிரிய ஜனதா தளம் பதிவிட்டுள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை தொடங்கியது. தற்போதைய முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரத்தின் படி பாஜக கூட்டணி 133 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 99 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எஞ்சியுள்ள பகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தால், தற்போது இருக்கும் முன்னிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், தர்பங்கா தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே நமது முதல் வெற்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், பீகாரில் நமது கூட்டணி தான் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும் பல்வேறு தொகுதிகளில் உள்ள கள நிலவரம் நமது கட்சிக்கு சாதகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.