×

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்!

லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். லோக் ஜனசக்தி கட்சி நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் காலமானார். அவருக்கு வயது 74. மத்திய அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்பொருள்துறை அமைச்சராக உள்ள பஸ்வா இறப்புக்கு குடியரசு தலைவர், பிரதமர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி , “சமூக நீதிக்காகவும் ஏழ்மை நிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர்.
 

லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சி நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் காலமானார். அவருக்கு வயது 74. மத்திய அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்பொருள்துறை அமைச்சராக உள்ள பஸ்வா இறப்புக்கு குடியரசு தலைவர், பிரதமர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி , “சமூக நீதிக்காகவும் ஏழ்மை நிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர். பிறப்பு சம்பவமாக இருக்கலாம்; இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கேற்றவாறு வாழ்ந்தவர் பஸ்வான்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். பஸ்வான் மறைவையொட்டி நாட்டின் அனைத்து மாநில தலைநகரிலும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்றும் அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.