×

மாநிலங்களவையில் நடவடிக்கைகளை செல்போனில் படம் பிடித்த எம்.பி.க்கள்… கண்டித்த வெங்கையா நாயுடு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகளை செல்போனில் படம் பிடித்த எம்.பி.க்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்தார். துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கூறியதாவது: மாநிலங்களவை அறைகளுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு உள்ளது. அவையில் உட்கார்ந்திருக்கும்போது சில உறுப்பினர்கள் தங்களது செல்போனில் அவை நடவடிக்கைகளை பதிவு செய்வதை பார்க்க முடிந்தது. இது போன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்ற ஆசாரத்திற்கு (நெறிமுறைகளுக்கு) எதிரானது. அவைக்குள் இது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து உறுப்பினர்கள் விலக வேண்டும்.
 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகளை செல்போனில் படம் பிடித்த எம்.பி.க்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்தார்.

துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கூறியதாவது: மாநிலங்களவை அறைகளுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு உள்ளது. அவையில் உட்கார்ந்திருக்கும்போது சில உறுப்பினர்கள் தங்களது செல்போனில் அவை நடவடிக்கைகளை பதிவு செய்வதை பார்க்க முடிந்தது. இது போன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்ற ஆசாரத்திற்கு (நெறிமுறைகளுக்கு) எதிரானது.

செல்போன்

அவைக்குள் இது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து உறுப்பினர்கள் விலக வேண்டும். சபையின் நடவடிக்கைகளை இது போன்ற அங்கீகாரமற்ற முறையில் பதிவு செய்தல் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புதல் ஆகியவை சலுகை மற்றும் அவையை அவமதிப்பதற்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவை நடவடிக்கைகள் 2 சேனல்களில் (ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி) தனித்தனியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தங்களது செல்போனில் அவை நடவடிக்கைகளை பதிவு செய்வது விவாதத்துக்கு வழி வகுத்துள்ளது.