×

ராஜஸ்தானில் இரவுநேர ஊடங்கு அமல்

ராஜஸ்தானின் அனைத்து நகரங்களிலும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு உத்தரவு இந்த மாத இறுதி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து, ராஜஸ்தானிலுள்ள அனைத்து கடைகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், சந்தைகள் ஆகியவற்றை மாலை 5 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவுநேர ஊரடங்கு உத்தரவில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு
 

ராஜஸ்தானின் அனைத்து நகரங்களிலும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு உத்தரவு இந்த மாத இறுதி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து, ராஜஸ்தானிலுள்ள அனைத்து கடைகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், சந்தைகள் ஆகியவற்றை மாலை 5 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவுநேர ஊரடங்கு உத்தரவில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


10 மற்றும் 12 ஆம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமணங்களில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் 6,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.