×

ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – 18 பேருக்கு நோட்டீஸ்

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்று சச்சின் பைலட் உள்ளிட்ட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டை நீக்கிவிட்டு சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த நிலையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தனக்கு உள்ளதாக அசோக்கெலாட் கூறினார். தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை நட்சத்திர
 

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்று சச்சின் பைலட் உள்ளிட்ட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டை நீக்கிவிட்டு சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த நிலையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தனக்கு உள்ளதாக அசோக்கெலாட் கூறினார். தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை நட்சத்திர விடுதியில் தங்க வைத்து ஆலோசனையும் நடத்தினார்.

இதில் சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி அவர் நீக்கப்பட்டார். சச்சின் பைலட் தரப்பில் தனியாக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சச்சின் பைலட் உள்ளட்ட கூட்டத்தில் பங்கேற்காத 18 எம்.எல்.ஏ-க்களுக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும். அப்படி அவர்கள் பதில் அளிக்காவிட்டால் அவர்கள் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குழுவில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். 18 எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் வீட்டு வாசலிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.