×

மகாராஷ்டிரா: மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்.. அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட நோயாளிகள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இங்கு கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தான் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளது. ஒரு புறம் அம்மாநில மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வர
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இங்கு கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தான் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளது. ஒரு புறம் அம்மாநில மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வர தவித்துக் கொண்டிருக்க, மறு புறம் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுவது போன்ற பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியில் உள்ள டாக்டர். உல்காஸ் படில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மழை நீர் புகுந்துள்ளது. ஒரு அடிக்கு மேல் மழை நீர் வந்ததால் அங்கிருந்து நோயாளிகள் அவசர அவசரமாக வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய மருத்துவர், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 8 நோயாளிகளும் பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.