×

பிரதமர் மோடிக்கு முன்னதாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி.. கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரை

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 31ம் தேதியன்று அமெரிக்காவுக்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்.

ராகுல் காந்தி வரும் 31ம் தேதியன்று அமெரிக்காவுக்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். ராகுல் காந்தி தனது பயணத்தில் ஜூன் 5ம் தேதி நியுயார்க் நகரின் மாடிஸன் ஸ்கொயார் கார்டனில் சுமார் 5 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் பேரணியை நடத்துவார் என தகவல். இதுதவிர, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு விவாதம் மற்றும் உரையாற்றுவதற்காக வாஷங்டன் மற்றும் கலிபோர்னியாவுக்கு  ராகுல் காந்தி செல்கிறார். ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது அரசியல்வாதிகள் மற்றும் தொழில்முனைவோரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி அண்மையில்  லண்டனில்  உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், தான் உள்பட பல அரசியல்வாதிகள் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து லண்டனில் இந்திய ஜனநாயகத்தையும், நாட்டின் அவமதித்ததிற்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர். இந்நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22ம் தேதியன்று அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ அரசு முறை பயணத்தை மேற்கொள்கிறார். பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அரசு விருந்து வழங்குவார்கள். இந்த தகவலை வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த வாரம் ஊடக அறிக்கையில் தெரிவித்து இருந்தது.