ஜன.14-ல் யாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி
Updated: Dec 27, 2023, 14:20 IST
மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத நியாய யாத்திரையை' ஜன.14-ல் தொடங்கி மார்ச் 20ல் நிறைவு செய்கிறார் ராகுல்காந்தி.
இதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுடன் கலந்துரையாட உள்ளார் ராகுல் காந்தி. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வருகிற 14ஆம் தேதி இந்த யாத்திரையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.