×

“வாக்குகளை திருடித்தான் மோடி பிரதமராகி உள்ளார்”- ராகுல்காந்தி

 

 

இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்குகளை திருடித்தான் மோடி பிரதமராகி உள்ளார் என என்னால் நிரூபிக்க முடியும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

டெல்லியில் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாங்கள் 100% நிரூபித்துள்ளோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்குகளைத் திருட தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து செயல்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்குகளை திருடித்தான் மோடி பிரதமராகி உள்ளார் என என்னால் நிரூபிக்க முடியும்.(2024) மக்களவைத் தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெறுகிறது. ஆனால் 4 மாதங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது. இது ஒரு ஆச்சரியமான தேர்தல் முடிவு. நாங்கள் கண்டுபிடிக்க முயற்சித்தபோது, 1 கோடி புதிய வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததை அறிந்தோம்; மக்களவைத் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்காத 1 கோடி புதிய வாக்காளர்கள் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதுபோன்ற புதிய வாக்குகள் பாஜகவுக்குச் சென்றன. இந்தப் புதிய வாக்காளர்கள் எங்கெல்லாம் வாக்களித்தார்களோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெற்றது” என்றார்.