×

‘பாட்டி’ இந்திரா காந்தியின் எமர்ஜென்சி முடிவு முற்றிலும் தவறானது – மெச்சவைக்கும் ராகுலின் பெருந்தன்மை!

இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும், அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கவுசிக் பாசுவுடன் ராகுல்காந்தி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பாசு ராகுல் காந்தியிடம், இந்தியாவில் 1995 முதல் 1997 வரை அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி குறித்து கேள்வி கேட்டார். அதற்குச் சற்றும் யோசிக்காமல் இந்திரா காந்தி செய்தது தவறு என ஒப்புக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது. எனது பாட்டியே அதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அடிக்கடி அதுபற்றி கூறி வருத்தப்படுவார்.
 

இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும், அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கவுசிக் பாசுவுடன் ராகுல்காந்தி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பாசு ராகுல் காந்தியிடம், இந்தியாவில் 1995 முதல் 1997 வரை அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி குறித்து கேள்வி கேட்டார்.

அதற்குச் சற்றும் யோசிக்காமல் இந்திரா காந்தி செய்தது தவறு என ஒப்புக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது. எனது பாட்டியே அதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அடிக்கடி அதுபற்றி கூறி வருத்தப்படுவார். ஆனால் அப்போதிருக்கும் சூழலும் தற்போது பாஜகவால் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி சூழலும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கக் கூடாது. காங்கிரஸ் எந்தச் சூழலிலும் இந்தியாவின் ஜனநாயகத்தன்மையைச் சிதைக்க விரும்பவில்லை. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்படி சிதைப்பதற்கான திறமை எங்களிடம் இல்லவே இல்லை.

அரசு அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் ஆட்களைக் களமிறக்கும் பாஜக

ஆனால் பாஜக முற்றிலும் வேறுவிதமான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படை அலகுகளான ஒவ்வொரு அரசு அமைப்பிலும் ஆர்எஸ்எஸ் ஆட்களைக் கொண்டு நிரப்பிவருகிறார்கள். இது முற்றிலும் சர்வாதிகாரப் போக்குக்கு அடிகோலிடும். நாங்கள் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்தாலும், அரசு அமைப்புகளில் இருக்கும் அவர்களது ஆட்களை எங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கான பெரிய சவால் காத்திருக்கிறது.

கமல்நாத்துக்கு நடந்த அவமதிப்பு சம்பவம்

இதற்கு உதாரணமாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு நிகழ்ந்த அவமதிப்பு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். அவர் பதவியிழப்பதற்கு முன் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் யாரும் அவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என கமல்நாத் குற்றஞ்சாட்டியிருந்தார். இதிலிருந்தே நான் கூறவருவதை உங்களால் விளங்கி கொள்ள முடியும்” என்றார். தற்போது இருக்கும் பாஜக தலைவர்கள் அவர்கள் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தலைவர்கள் புரிந்த தவறுகளை நியாயப்படுத்திவரும் வேளையில், தனது பாட்டியின் தவறையே விமர்சித்திருப்பது ராகுலின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.