×

ஆக்சிஜன் கசிவால் 22 கொரோனா நோயாளிகள் பலி… ராகுல் காந்தி வேதனை!

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. முதல் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவீதத்தினருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவைப்பட்டது. தற்போது 54 சதவீதம் பேருக்கு அவசியமாகிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் இவ்வளவு நாளும் ஏராளமானோர் இறந்த நிலையில், மகாராஷ்டிராவில் இன்று ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலியாகியுள்ளனர். நாசிக் ஜாகிர் உசேன்
 

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. முதல் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவீதத்தினருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவைப்பட்டது. தற்போது 54 சதவீதம் பேருக்கு அவசியமாகிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆக்சிஜன் இல்லாமல் இவ்வளவு நாளும் ஏராளமானோர் இறந்த நிலையில், மகாராஷ்டிராவில் இன்று ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலியாகியுள்ளனர். நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக்கசிவால் கொரோனா நோயாளிகள் 22 பேர் உயிரிழந்துள்ளனர். டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்சிஜன் மாற்றும் பணி நடைபெற்றபோதும், இந்த அசம்பாவிதம் நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில், “நாசிக்கின் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் நோயாளிகள் இறந்த செய்தி கேட்டு துயரமடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து உதவிகளையும் வழங்குமாறு நான் அரசிடம் கட்சி ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.