×

காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்து சென்ற ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் இறுதி ஊர்வலத்தின் கலந்து கொண்ட ராகுல் காந்தி , அவரை உடலை தோளில் சுமந்து சென்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் ஷர்மா 1993 – 1996 ஆம் ஆண்டு வரை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அத்துடன் இவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரும் ஆவார். தற்போது 73 வயதாகும் சதீஷ் ஷர்மா, நேற்று முன்தினம் கோவாவில் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில்
 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் இறுதி ஊர்வலத்தின் கலந்து கொண்ட ராகுல் காந்தி , அவரை உடலை தோளில் சுமந்து சென்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் ஷர்மா 1993 – 1996 ஆம் ஆண்டு வரை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அத்துடன் இவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரும் ஆவார். தற்போது 73 வயதாகும் சதீஷ் ஷர்மா, நேற்று முன்தினம் கோவாவில் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் மறைந்த சதீஷ் சர்மா இறுதி சடங்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் மறைந்த சதீஷ் ஷர்மாவின் உடலை தோளில் சுமந்து சென்றார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

சதீஷ் ஷர்மா மறைவு குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கேப்டன் சதீஷ் ஷர்மா இறந்தது குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். மிஸ் யூ ” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.