×

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது

 

ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர். 

ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பதவி விலகக்கோரி பிரதமர் இல்லம் அருகே 3 மணி நேரத்திற்கும் மேலாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.  ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது செய்யபட்டனர்.

கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியும் காங்கிரசார் கலைந்து செல்ல மறுத்ததால் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு சென்றனர். ராகுல்காந்தி கைதை தொடர்ந்து பிரதமர் இல்லத்தின் வெளியே கூடுதல் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.