#BREAKING புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்- ஒருவர் பலி
ஒடிசா புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலால் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் பூரியில் நடைபெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 5 மணியளவில் ஜெகந்நாதப் பெருமானைத் தரிசிப்பதற்காக மக்கள் திடீரென ரதங்களை நோக்கி வரத் தொடங்கினர். வழி நெடுகிலும் இருந்த தன்னார்வலர்கள் மக்களைப் பின்னுக்கு இழுக்க முயன்றனர். இருப்பினும் மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொள்ளத் தொடங்கியபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ஒருவர் மீது ஒருவர் விழத் தொடங்கினர். தற்போது பூரியில் கனமழை பெய்து வருகிறது. அப்படியிருந்தும், புனித யாத்திரை செல்லும் வழியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடியுள்ளனர். இந்த ஊர்வலம், பிரதான கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குண்டிச்சா கோயிலை நோக்கி செல்லும்.