×

இப்பவும் அடிதான் ஆனாலும் கொஞ்சம் பரவாயில்லை… பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.697 கோடி நஷ்டம்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு தனிப்பட்ட முறையில் நிகர நஷ்டமாக ரூ.697.20 கோடி ஏற்பட்டுள்ளது. 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.4,749.64 கோடி தனிப்பட்ட நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வாராக் கடன் 14.21 சதவீதமாக குறைந்துள்ளது. 2019 மார்ச் இறுதியில் பஞ்சாப்
 

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு தனிப்பட்ட முறையில் நிகர நஷ்டமாக ரூ.697.20 கோடி ஏற்பட்டுள்ளது. 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.4,749.64 கோடி தனிப்பட்ட நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வாராக் கடன் 14.21 சதவீதமாக குறைந்துள்ளது. 2019 மார்ச் இறுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வாராக் கடன் 15.50 சதவீதமாக இருந்தது. அதேபோல் இதே காலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர வாராக் கடன் 6.56 சதவீதத்திலிருந்து 5.78 சதவீதமாக குறைந்துள்ளது. பொதுவாக வாராக் கடன் குறைவது வங்கிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் நல்லது.

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்நாட்டில் திரட்டிய டெபாசிட் 4.9 சதவீதம் அதிகரித்து ரூ.6.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கி கடன் 1.1 சதவீதம் 1.1 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.4.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.