×

‘ஒரு வாரத்திற்கு இரவு நேர ஊரடங்கு’ : எதற்கெல்லாம் தடை தெரியுமா?

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம் ,தமிழகம் ,மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா வேகம் காட்டி வருகிறது. தினசரி சுமார் 40ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் புனேவில் நாளை
 

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம் ,தமிழகம் ,மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா வேகம் காட்டி வருகிறது. தினசரி சுமார் 40ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் புனேவில் நாளை காலை 6 மணி முதல் 9 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு 12 மணி நேர ஊரடங்கு உத்தரவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் பூங்காக்கள் , வணிக வளாகங்கள் மற்றும் திரைப்பட அரங்குகள் அனைத்தும் அடுத்த ஏழு நாட்களுக்கு மூடப்படும் என்று மாவட்ட ஆணையர் சவுரப் ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் வீட்டிற்கே டெலிவரி செய்ய அனுமதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை வரும் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மறுஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரமாக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில்நிபுணர் குழு ஆலோசனைப்படி ஊரடங்கை தீவிரமாக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.