×

பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர்!

புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தேர்தலை சந்தித்தவர் நமச்சிவாயம். இந்த தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய நிலையில் தேர்தலில் பங்கெடுக்காத நாராயணசாமி திடீரென முதல்வராக பதவியேற்றார். இதனால் நமச்சிவாயம் ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும் அவருக்கு கட்சியில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராகவும்,
 

புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தேர்தலை சந்தித்தவர் நமச்சிவாயம். இந்த தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய நிலையில் தேர்தலில் பங்கெடுக்காத நாராயணசாமி திடீரென முதல்வராக பதவியேற்றார். இதனால் நமச்சிவாயம் ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும் அவருக்கு கட்சியில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராகவும், அமைச்சராகவும் பதவி வகித்து வந்த நமச்சிவாயம் கடந்த ஆண்டு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நமச்சிவாயம் கடந்த சில மாதங்களாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் உள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் தலைவருமான நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் வில்லியனூர் தொகுதி நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனடிப்படையில் வரும் 26ஆம் தேதி டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.