×

புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு

உலகின் எல்லா இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனுள் இந்தியாவும் ஒன்று. காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்ட இந்த கொரோனாவில் இருந்து மக்களை காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. இந்த கொடிய வகை கொரோனாவின் பிடியில் சிக்கிய மாநிலங்களுள் புதுச்சேரியும் ஒன்று. இதனால் அங்கு தற்போது 52 பகுதிகளில் முழு
 

உலகின் எல்லா இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனுள் இந்தியாவும் ஒன்று. காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்ட இந்த கொரோனாவில் இருந்து மக்களை காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. இந்த கொடிய வகை கொரோனாவின் பிடியில் சிக்கிய மாநிலங்களுள் புதுச்சேரியும் ஒன்று. இதனால் அங்கு தற்போது 52 பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. தேவைப்பட்டால் புதுச்சேரி முழுவதிலும் கூட முழுமுடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இதேபோல் புதுச்சேரியிலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள், மதுபான கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20ம் தேதி வரை சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.