×

பப்ஜி மோகம் – தாத்தாவிடம் கைவரிசை !… ரூ. 2 லட்சம் திருடி பேடிஎம் செய்த பலே பேராண்டி !!

சமீபத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் பல சிறுவர்களையும், இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருந்தது என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதே சமயம் அது எந்தளவுக்கு ஆபத்தான கேம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பப்ஜி கேம் மோகத்தில் தாத்தா அக்கவுண்டில் இருந்து 2 லட்சத்துக்கு மேல் பணத்தை திருடிய பேரன், அதை பப்ஜி நிறுவனத்திற்கு பேடிஎம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லி திமார்பூரில் 65 வயது தாத்தாவுடன் வசிக்கும் 15 வயது பேரன் வசித்து
 

சமீபத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் பல சிறுவர்களையும், இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருந்தது என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதே சமயம் அது எந்தளவுக்கு ஆபத்தான கேம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பப்ஜி கேம் மோகத்தில் தாத்தா அக்கவுண்டில் இருந்து 2 லட்சத்துக்கு மேல் பணத்தை திருடிய பேரன், அதை பப்ஜி நிறுவனத்திற்கு பேடிஎம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டெல்லி திமார்பூரில் 65 வயது தாத்தாவுடன் வசிக்கும் 15 வயது பேரன் வசித்து வந்துள்ளான். பப்ஜிக்கு அடிமையான இந்த சிறுவன், அதில் ஏஸ் நிலையை அடைய, அவ்வப்போது இன் ஆப் பர்சேஸ் என்ற முறையில் தனது தாத்தா வங்கி கணக்கில் இருந்து பப்ஜி நிறுவனத்திற்கு பேடிஎம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக 2 மாதங்களில் மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரம்ஐ ரூபாயை பணத்தை செலுத்தி உள்ளதும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் தனது கணக்கில் இருந்து சிறிய தொகையை எடுத்த போது தனது கணக்கில் 2 லட்சத்துக்கு மேல் தொகை குறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியவர் அது குறித்து வங்கியில் முறையிட்டுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட பேடிஎம் கணக்கிற்கு 2 மாதங்களில் 2.34 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் விசாரணையில் பப்ஜி மோகத்தில் பேரனே தாத்தா பணத்தை திருடியது அம்பலமானது. மார்ச் 24ம் தேதி முதல் மே 8ம் தேதிக்குள் இவ்வளவு தொகையை அந்த சிறுவன் பணப்பறிமாற்றம் செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனினும் தனது பேரன் என தெரிந்ததும், அந்த பெரியவர் புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாக தெரிகிறது.

பப்ஜி கேமில் அடிமையாகும் சிறுவர்களால் பணம் திருடுபோகும் சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.. ஏற்கனவே கடந்த ஜூலையில், பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன், தனது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து 16 லட்ச ரூபாயை திருடி, பப்ஜி நிறுவனத்திற்கு இன் ஆப் பர்சேஸ் முறையில் பணம் செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. அதேப்போல பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மற்றொரு 15 வயது சிறுவனம் தனது தாத்தாவின் பென்சன் வங்கி கணக்கில் கைவைத்து 2 லட்சத்தை திருடி பப்ஜி நிறுவனத்திற்கு செலுத்திய சம்பவமும் நினைவுகூரத்தக்கது.

எஸ்.முத்துக்குமார்