×

பா.ஜ.க பிரமுகருடன் ஸ்வப்னாவுக்கு தொடர்பு என கசிந்த வாக்குமூலம்… விசாரணை அதிகாரி மாற்றம்!

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் வெளியே கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணைக் குழு அதிகாரியை மாற்றம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தியதாக ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளன. கேரள முதல்வரின் தனிச் செயலாளராக பணியாற்றிய சிவசங்கரனும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் முதல்வர் அலுவலகம் சம்பந்தப்பட்டு உள்ளதால் பினராயி விஜயன் பதவி விலக
 

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் வெளியே கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணைக் குழு அதிகாரியை மாற்றம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swapna Suresh


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தியதாக ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளன. கேரள முதல்வரின் தனிச் செயலாளராக பணியாற்றிய சிவசங்கரனும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் முதல்வர் அலுவலகம் சம்பந்தப்பட்டு உள்ளதால் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

Swapna Suresh Pinarayi Vijayan


இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பா.ஜ.க ஆதரவு ஊடகப் பிரபலம் அனில் நம்பியாருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது என்று ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார். 2018ம் ஆண்டு முதல் கைது செய்யப்படும் வரை அவரோடு நட்பில் இருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருந்தது பா.ஜ.க-மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.


ரகசிய வாக்குமூலம் பத்திரிகைகளில் வெளியானது எப்படி என்று பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் கொந்தளித்தனர். இதைத் தொடர்ந்து விசாரணைக் குழுவிலிருந்த தேவ் என்ற அதிகாரி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க நிர்வாகிகளை காப்பாற்றும் வகையில் அவர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.