×

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு மோடி உரை

 

நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.


பரபரப்பான சூழலில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு  உரையாற்ற உள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது தொடர்பாக அவர் பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை நிலவரம் குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவுள்ளார்.

காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியதோடு, போர் உருவாகும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு பின்னர் தாக்குதல் நிறுத்திக்கொள்ளப்பட்டது.