×

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96வது பிறந்தநாள்: மோடி, ராம்நாத் கோவிந்த் மரியாதை!

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் 1998 முதல் 1999 வரை, 1999- 2004 வரை என பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்தார். லோக்சபாவிற்கு, 10 முறையும், ராஜ்யசபாவுக்கு, இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு
 

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் 1998 முதல் 1999 வரை, 1999- 2004 வரை என பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்தார். லோக்சபாவிற்கு, 10 முறையும், ராஜ்யசபாவுக்கு, இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு சொந்தக் காரரான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில் வாஜ்பாயின் 96வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றவர், வளமான இந்தியாவை அமைப்பதற்கான, வாஜ்பாயின் முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படும் ” என்று பதிவிட்டுள்ளார்.