×

ராம் விலாஸ் பஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி!

ராம் விலாஸ் பஸ்வானுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். லோக் ஜனசக்தி கட்சி நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் உடல்நல குறைவால் காலமானார். மத்திய அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்பொருள்துறை அமைச்சராக உள்ள பஸ்வான் இறப்புக்கு குடியரசு தலைவர், பிரதமர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பஸ்வான் மறைவையொட்டி நாட்டின் அனைத்து மாநில தலைநகரிலும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்றும்
 

ராம் விலாஸ் பஸ்வானுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

லோக் ஜனசக்தி கட்சி நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் உடல்நல குறைவால் காலமானார். மத்திய அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்பொருள்துறை அமைச்சராக உள்ள பஸ்வான் இறப்புக்கு குடியரசு தலைவர், பிரதமர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பஸ்வான் மறைவையொட்டி நாட்டின் அனைத்து மாநில தலைநகரிலும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்றும் அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராம் விலாஸ் பஸ்வான் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பீகார் மாநில அரசியல் தலைவர்களில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் பஸ்வான். பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ராம் விலாஸ் பஸ்வான் மறைவு அரசியலில் தளத்தில் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.