×

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி!

 

பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். 

பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் பிதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார் பிரதமர் மோடி. இந்த அனுபவம் நமது நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.