×

டிச.4ல் அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் இரண்டாம் கட்ட பரிசோதனையில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. அதே போல, கோவிஷீல்டு, ஸ்புட்னிக் உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில். கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்து வரும் அகமதாபாத் சைடஸ் பயோடெக் பார்க், ஐதராபாத்தில் பாரத் பயோடெக்
 

உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் இரண்டாம் கட்ட பரிசோதனையில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. அதே போல, கோவிஷீல்டு, ஸ்புட்னிக் உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அண்மையில். கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்து வரும் அகமதாபாத் சைடஸ் பயோடெக் பார்க், ஐதராபாத்தில் பாரத் பயோடெக் மற்றும் புனே சீரம் இன்ஸ்ட்டியூட் ஆகிய நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த நிறுவனங்கள் தீவிரமாக மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் கொரோனா தடுப்பு மருந்து அமலுக்கு வரும் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி அனைத்து கட்சிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.