×

விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

 

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு பிரதமர் காணொளி வாயிலாக உரையாட தொடங்கினார். 

அப்போது பேசிய அவர்,  "விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண்  சட்டங்களும் கொண்டுவரப்பட்டன . வேளாண் விளைபொருட்கள் சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. மூன்று வேளாண்  சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அதே சமயம் மூன்று பேரும் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.

2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளோம். நாட்டில்  விவசாயிகள் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர்விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் எங்களால் விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுகிறது. போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதை மத்திய அரசின் நோக்கம். புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும்; அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண்  வல்லுனர்கள் இடம்பெறுவர் " என்றார். 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்தனர். கடும் குளிர், மழையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தியதில் , பலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்  கவன் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.