×

9 வயது சிறுமியை 3 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பாதிரியார் – நீதிகேட்கும் மக்கள் #JusticeForDelhiCanttGirl

டெல்லியில் கான்ட் பகுதியை அடுத்த பழைய நங்கல் கிராமத்தில் எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி, நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் எடுக்க சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடிச் சென்றுள்ளனர். இரவு 7.30 மணிக்கு சுடுகாட்டில் சென்று தாய் தேடியபோது, அங்கிருந்த பாதிரியார் ராதே ஸ்யாம்(45) மற்றும் தகன
 

டெல்லியில் கான்ட் பகுதியை அடுத்த பழைய நங்கல் கிராமத்தில் எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி, நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் எடுக்க சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடிச் சென்றுள்ளனர். இரவு 7.30 மணிக்கு சுடுகாட்டில் சென்று தாய் தேடியபோது, அங்கிருந்த பாதிரியார் ராதே ஸ்யாம்(45) மற்றும் தகன மேடை ஊழியர்கள் லட்சுமி நாராயணன், சலீம், குல்தீப் ஆகியோர், உங்க மகள் தண்ணீர் பிடிக்க வந்தார். தண்ணீர் தொட்டியில் இருந்த மின் வயரை தொட்டதால் அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார் என்று சொல்லி இருக்கின்றனர்.

மகளின் உடலை காட்டியதும் தாய் கட்டியணைத்து கதறினார். உடனே பெற்றோர் மற்றும் உறவினர்களிடம், போலீசுக்கு போனால் பிரேத பரிசோதனை செய்வார்கள். உங்கள் மகள் வெட்டி உடல் உறுப்புகளை திருடிவிடுவார்கள். அதனால் சுடுகாட்டிலேயே எரித்து விடுங்கள் என்று சொல்லவும், உறவினர்களும் அதன்படியே செய்துள்ளனர்.

ஆனால் வீட்டிக்கு திரும்பிய சிறுமியின் தாயாருக்கு மட்டும் சந்தேகம் இருந்துள்ளது. மகளின் மணிக்கட்டின் இருந்த காயமும், உதடுகள் நீல நிறமாக இருந்ததும் சந்தேகம் கொடுத்தது. இதை எல்லோரிடமும் சொல்ல, அவர்கள் போலீசுக்கு சொல்ல, போலீஸ் வந்தபோது அதற்கு சிறுமியின் உடல் பாதி எரிந்துவிட்டது.

ஓடிப்போயி தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு, எரியாமல் இருந்த பாகங்களை சேகரித்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.

போலீசார் பாதிரியாரிடம் விசாரித்ததில் அவரும் சுடுகாட்டில் வேலை செய்த 3 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியின் கொலைக்கு நியாயம் கேட்டு, #JusticeForDelhiCanttGirl என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர் மக்கள். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி இருக்கிறது.