×

ஒரே பாரதம், உன்னத பாரதம் - பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரை!!

 

 பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் இன்று  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்;நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றனஉலகளவில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது; விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களின் நினைவாக மண் எடுத்துவரப்பட்டு டெல்லியில் வைக்கப்பட்டுள்ளது.

கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது; இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 2 காலாண்டுகளாக 7.5 சதவீதத்திற்கு மேல் உள்ளது நிலவின் தென் துருவத்தில் கொடி ஏற்றிய முதல் நாடு  இந்தியா என்றார்.