×

‘இரவு பகலாக கொரோனா களப்பணி’ உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் நிதியுதவி!

கொரோனா காலத்தில் களப்பணி ஆற்றி உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் குடும்பத்துக்கு குடியரசுத்தலைவர் நிதியுதவி அளித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் இருக்கும் சீலம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆரிஃப் கான். இவர் கொரோனா காலகட்டத்தில் உடல்களை அடக்கம் செய்வது, பண உதவி செய்வது போன்றவற்றை முழு நேர வேலையாக செய்து வந்தார். கிட்டத்தட்ட 6 மாதமாக ஆம்புலன்ஸிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவர், கொரோனா பரவி விடாமல் இருக்க தனது குழந்தைகள் மற்றும் மனைவியை கூட சென்று பார்க்கவில்லையாம். கடந்த
 

கொரோனா காலத்தில் களப்பணி ஆற்றி உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் குடும்பத்துக்கு குடியரசுத்தலைவர் நிதியுதவி அளித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் இருக்கும் சீலம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆரிஃப் கான். இவர் கொரோனா காலகட்டத்தில் உடல்களை அடக்கம் செய்வது, பண உதவி செய்வது போன்றவற்றை முழு நேர வேலையாக செய்து வந்தார். கிட்டத்தட்ட 6 மாதமாக ஆம்புலன்ஸிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவர், கொரோனா பரவி விடாமல் இருக்க தனது குழந்தைகள் மற்றும் மனைவியை கூட சென்று பார்க்கவில்லையாம்.

கடந்த 6 மாதத்தில் கிட்டத்தட்ட 200 உடல்களை தனது ஆம்புலன்ஸில் கொண்டு சென்று அடக்கம் செய்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு உறுதுணையாக நின்ற ஆரிஃப் கானையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனவால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10ம் தேதி உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்த செய்தி, ஊடகங்களின் வாயிலாக குடியரசுத்தலைவரின் கவனத்துக்கு சென்றது. இதனையடுத்து ஆரிஃப் கானை இழந்து வாழும் அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.