×

அரசு நிறுவனம்தான்….வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு… பவர் கிரிட் லாபம் ரூ.2,048.42 கோடி

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மின்சாரத்தை பரிமாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதம் இந்நிறுவனத்தின் மின் விநியோக கட்டமைப்பு வாயிலாகத்தான் நாடு முழுவதும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,048.42 கோடி
 

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மின்சாரத்தை பரிமாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதம் இந்நிறுவனத்தின் மின் விநியோக கட்டமைப்பு வாயிலாகத்தான் நாடு முழுவதும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

2020 ஜூன் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,048.42 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,502.80 கோடி ஈட்டியிருந்தது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.9,816.72 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.9,361.72 கோடியாக இருந்தது. மேலும் கடந்த ஜூன் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் செலவினம் ரூ.6,277.29 கோடியாக உயர்ந்துள்ளது.