×

16 வயது சிறுமியை மணந்த இளைஞர்; மணமகன் மற்றும் பெற்றோர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என்றாலும், பல இடங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் தெலங்கானாவிலும் குழந்தை திருமணம் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் மெத்ஜால் என்னும் மாவட்டம் உள்ளது. அம்மாவட்டத்தில் கந்தலகொயா என்னும் பகுதியில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் யாருமே மாஸ்க் அணியவில்லையாம். இது தொடர்பாக குழந்தை திருமணம் தடுப்புப்பிரிவு
 

18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என்றாலும், பல இடங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் தெலங்கானாவிலும் குழந்தை திருமணம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் மெத்ஜால் என்னும் மாவட்டம் உள்ளது. அம்மாவட்டத்தில் கந்தலகொயா என்னும் பகுதியில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் யாருமே மாஸ்க் அணியவில்லையாம். இது தொடர்பாக குழந்தை திருமணம் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு 16 வயது என்றும் அந்த இளைஞருக்கு 30 வயது என்றும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர், மணமகன் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் மீது போலீசார் போக்சோ, குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தை திருமணம் நடத்தக் கூடாது என்று சட்டப்படி அறிவுறுத்தப்பட்டிருப்பினும் தெலுங்கானாவில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.