“பயங்கரவாதிகள் தப்ப முடியாது! வேட்டையாடுவோம்”- பிரதமர் மோடி
Apr 24, 2025, 18:06 IST
பஹெல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூடியுள்ளார்.
பீகாரின் மதுபனியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று, பீகார் மண்ணிலிருந்து, நான் முழு உலகிற்கும் கூறுகிறேன். காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ஒவ்வொருவராக கண்டுபிடித்து வேட்டையாடுவோம். பயங்கரவாதிகள் ஒருபோதும் தப்ப முடியாது. பயங்கரவாதிகளுக்கான தண்டனை, அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். பயங்கரவாதிகளை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை நின்றவர்களும் அழிக்கப்படுவார்கள். பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம்வந்துவிட்டது, பயங்கரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம். பூமியின் எல்லை வரை பயங்கரவாதிகளை விரட்டி அடிப்போம்” என்றார்.