பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் கார்கே அவசர கடிதம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவை (தொகுதி மறுவரையறை மசோதா) மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை அடுத்து, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்த மசோதாவை அவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதிக்க வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது. மசோதா உள்ளடக்கத்தைப் படிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவில் மெஜாரிட்டியை நிரூபிக்க பாஜக தீவிரம் காட்டிவருகிறது. சட்டத் திருத்தத்திற்குத் தேவையான 360 உறுப்பினர்களின் பலத்தை உறுதி செய்ய பாஜக மேலிடம் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளது.