×

இந்தியாவில் புதிய உலக அதிசயம்! மோடி மகிழ்ச்சி

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவிரா நகரை யுனெஸ்கோ அங்கிகரித்து அறிவித்துள்ளது. இதுவரை உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இந்தியாவில் 40 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சிந்து சமவெளி நாகரீக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலாவிரா தற்போது யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜாரத்தில் ஒரு கீழடி என போற்றத்தக்க வகையில் தோலாவிராவின் கட்டுமானங்கள் நம் முன்னோர்களான சிந்துசமவெளி மக்களின் வாழ்வியலை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்று
 

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவிரா நகரை யுனெஸ்கோ அங்கிகரித்து அறிவித்துள்ளது.

இதுவரை உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இந்தியாவில் 40 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சிந்து சமவெளி நாகரீக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலாவிரா தற்போது யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜாரத்தில் ஒரு கீழடி என போற்றத்தக்க வகையில் தோலாவிராவின் கட்டுமானங்கள் நம் முன்னோர்களான சிந்துசமவெளி மக்களின் வாழ்வியலை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால் மட்டுமே இந்தியாவில் இருந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிரா என்ற இடத்தை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கண்டிப்பாக காணவேடிய இடங்களில் ஒன்று தோலாவிரா. குறிப்பாக வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியலில் ஆர்வமுள்ளவர்கள் காண வேண்டிய இடம் எனக் கூறியுள்ளார்.