×

“இந்திய வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை கொடுத்தவர் அப்துல் கலாம்”- பிரதமர் மோடி ட்வீட்!

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 89ஆவது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தேசிய வளர்ச்சிக்கு அவர் அழியாத பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்க முடியாது, அது ஒரு விஞ்ஞானியாகவும், இந்திய ஜனாதிபதியாகவும் இருக்கலாம். அவரது வாழ்க்கை பயணம் மில்லியன் கணக்கானவர்களுக்கு பலத்தை அளிக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். நம் நாட்டின் 16ஆவது குடியரசுத் தலைவராக
 

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 89ஆவது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தேசிய வளர்ச்சிக்கு அவர் அழியாத பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்க முடியாது, அது ஒரு விஞ்ஞானியாகவும், இந்திய ஜனாதிபதியாகவும் இருக்கலாம். அவரது வாழ்க்கை பயணம் மில்லியன் கணக்கானவர்களுக்கு பலத்தை அளிக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நம் நாட்டின் 16ஆவது குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி. ஜே. அப்துல் காலம், அறிவியல் ஆலோசகர் (ISRO) விண்வெளி பொறியாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்பு வகித்தவர். அவரது பிறந்த நாளே உலக மாணவர் தினமாக ஐக்கிய நாடுகள் அவையில் அறிவிக்கப்பட்டது. பத்ம பூஷண் விருது, பத்ம விபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை தன் வசமாக்கிய மாமனிதர் அப்துல் காலமின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் அவரது நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.