×

புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

 

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடிஇன்று திறந்து வைக்கிறார்.

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக புனரமைக்கப்பட்ட103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். தமிழகத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் உட்பட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். 

தமிழகத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட், சூலூர்பேட்டை, சாமல்பட்டி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை,போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குழித்துறை ஆகிய ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்படவுள்ளன. புனரமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.