×

 அனைத்து மாநில முதலமைச்சருடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை!! 

 

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சருடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் என்பது மக்களை ஆட்டி படைத்தது வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் ஒருபக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டது. கடன்த சில வாரங்களாகவே இந்தியாவில் தொற்று பாதிப்பு என்பது தீவிரமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை  1,68,063ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல்  ஒரேநாளில் 69,959 பேர் கொரோனாவிலிருந்து குணமாகிய நிலையில் 277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.   தற்போது கொரோனாவால்  8,21,446 பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் 27 மாநிலங்களில் பரவியுள்ள ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. 

இந்நிலையில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடனான பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்,  கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியைப் செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது  உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.