×

குடியரசு தலைவருக்கு திடீர் நெஞ்சு வலி… பதறியடித்த பிரதமர் மோடி!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது என ராணுவ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இச்சூழலில் அரசியல் முறை பயணமாக பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ள நிலையில், இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது என ராணுவ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இச்சூழலில் அரசியல் முறை பயணமாக பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ள நிலையில், இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ராம்நாத் கோவிந்தின் மகனை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்திருக்கிறார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை குறித்து அவரின் மகனிடம் தொடர்புகொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். அவரிடம் அப்பா விரைவாகக் குணமடைய கடவுளைப் பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.