×

விவசாய மசோதாக்கள்- கங்கையைப்போல தூய்மையான நோக்கம் கொண்டது – பிரதமர் வாக்குறுதி!

டெல்லியில் போராடும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து வதந்திகள் பரப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். வேளாண்மை சட்டங்கள் குறித்து அடிப்படை ஆதாரமற்ற தொலைநோக்கு பார்வைகள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக கூறியுள்ளார். இன்று வாரணாசி சென்ற பிரதமர், அங்கு உரையாற்றுகையில் இதனைக் கூறினார். புதிய வேளாண்மைச் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து விடும் என நம்பிக்கை உள்ளதாக பிரதமர் கூறினார். இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளை எந்த
 

டெல்லியில் போராடும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து வதந்திகள் பரப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். வேளாண்மை சட்டங்கள் குறித்து அடிப்படை ஆதாரமற்ற தொலைநோக்கு பார்வைகள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக கூறியுள்ளார். இன்று வாரணாசி சென்ற பிரதமர், அங்கு உரையாற்றுகையில் இதனைக் கூறினார். புதிய வேளாண்மைச் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து விடும் என நம்பிக்கை உள்ளதாக பிரதமர் கூறினார். இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளை எந்த வகையிலும் ஏமாற்றாது. கங்கை நீரின் புனிதம்போல, விவசாய மசோதாக்களின் நோக்கம் தூய்மையானது என தெரிவித்தார்.

புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை சக்தி மிக்கவர்களாக மாற்றும். அவர்களின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் . ஆனால், சிலர் விவசாயிகளுக்கு தவறான தகவல்களை அளிக்கின்றனர் என எதிர்கட்சிகளை குற்றம் சாட்டினார். தவறான பிரசார நோக்கங்களுக்கான விவசாயிகளை பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு நேரடியாக எந்த பயனும் சென்றுவிடக்கூடாது, விவசாய பலன்களை இடைத்தரகர்களுக்கு செல்ல வேண்டும் என்பது சிலர் விருப்பமாக உள்ளது. வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, உண்மையான பலன்கள் யாருக்குச் செல்கிறது என அனுபவபூர்வமாக தெரிந்துவிடும் என தெரிவித்தார்.

சிறு விவசாயிகள், விவசாய சந்தைகளுக்கு சென்று விற்க முடியாத நிலையில் இருக்கின்றனர். தற்போது வேளாண் சட்டங்களை அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும். சிறு விவசாயிகளில் சட்டரீதியான பாதுகாப்பை பெறுவது அவர்களது உரிமையாகும். அரசு இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டுமா ? அல்லது இடைத்தரகர்களை ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறார்களா ? என எதிர்கட்சிகள் மீது பிரதமர் குற்றம் சாட்டினார்.