×

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதிகாரிகள் கொரோனா நிலவரம் என்ன, கொரோனாவை எதிர்க்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய மோடி, நகரங்களைத் தொடர்ந்து கிராமங்களிலும் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் அதைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று
 


கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதிகாரிகள் கொரோனா நிலவரம் என்ன, கொரோனாவை எதிர்க்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் பேசிய மோடி, நகரங்களைத் தொடர்ந்து கிராமங்களிலும் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் அதைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை உடனடியாக தனிமைப்படுத்தப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மாநில அரசுகள் எந்தவிதமான அழுத்தமும் இன்றி, தினசரி பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், பல மாநிலங்கள் பாதிப்பு, உயிரிழப்பு குறித்து தவறான புள்ளிவிவரங்களையே தருகிறது எனவும் எச்சரித்தார். அதேபோல கிராமப்புறங்களுக்குச் செல்லும் அங்கன்வாடி பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கிடவும் மோடி வலியுறுத்தினார்.