×

"அரசியலில் ஓய்வே இல்லை"- பிரதமர் மோடி

 

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை என பிரதமர் மோடி கூறினார்.

ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்பிக்களை பாராட்டி பேசிய பிரதமர் மோடி, “கார்கே, சரத் பவார், தேவ கவுடா ஆகியோர் தங்கள் வயதில் அதிக நாட்களை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்துள்ளனர். அரசியல்யணம் என்பது என்றும் தொடரக்கூடியது. அரசியலில் 'முற்றுப்புள்ளி' என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும். தங்களின் அனுபவத்தைக் கொண்டு சமுதாயத்திற்கு சேவையாற்ற அடுத்த கட்ட பயணத்தில் அடியெடுத்து வைக்க உள்ளனர். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது. இது போன்ற தருணங்களில், கட்சி எல்லைகளைக் கடந்து ஒற்றுமை உணர்வுடன் நாம் ஒன்றிணைகிறோம். கார்கே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து உத்வேகம், வழிகாட்டுதல் உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்களை இளம் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.