பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கினால் பதவி பறிபோகும் என சிலா் பயப்படுகின்றனா்- பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கினால் தங்கள் பதவி பறிபோகும் என சிலா் பயப்படுகின்றனா் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கினால் தங்கள் பதவி பறிபோகும் என சிலா் பயப்படுகின்றனா். உள்ளாட்சி அமைப்பில் மகளிருக்கு 50% தர ஆதாிக்கும் நபா்கள் நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு தர பயப்படுகின்றனா். பெண்கள் மசோதாவை எதிர்க்கும் முடிவை மட்டும் எதிர்க்கட்சிகள் யாரும் எடுக்காதீர்கள், பிறகு அந்த தவறை சரி செய்ய முடியாது.
அரசியல் காரணங்களுக்காக மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தவர்களை தேர்தல்களில் மகளிர் மன்னிக்கவில்லை.தனிப்பட்ட முறையில் மகளிர் மசோதாவை ஆதரிப்பவர்கள், பொதுவெளியில் எதிர்க்கின்றனர். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். 30 ஆண்டுகளில் ஊராட்சி பிரதிநிதித்துவம் காரணமாக மகளிர் அரசியல் அனுபவம் கொண்டுள்ளனர். முதலில் 33% மகளிரை மக்களவைக்கு வர அனுமதிக்க வேண்டும், உள் ஒதுக்கீட்டை அவர்கள் முடிவு செய்வார்கள். நமது நோக்கத்தில் பிழை இருக்கக்கூடாது, அப்படியிருந்தால் மகளிர் சமுதாயம் நம்மை மன்னிக்காது. மகளிர் இடஒதுக்கீடு என்பது நாட்டு நலனுக்கான முடிவு. இதில் அரசியல் செய்ய வேண்டாம்” என்றார்.