×

“தொகுதிகள் மறுவரையறையால் எந்த மாநிலங்களுக்கும் பாதிப்பு இருக்காது!  உறுதிமொழி வழங்க தயார்”- பிரதமர் மோடி

 

தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

சட்ட திருத்த மசோதா மீது மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வராமல் காலம் தாழ்த்தியவர்களை பெண்களே கடந்த காலங்களில் தேர்தல்களில் தண்டித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்ய வேண்டும் என விரும்பினாலும் அவர்களிடம் தான் சொல்ல விரும்புவது கடந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தோல்விகளிலிருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் இந்த முடிவை நீங்கள் ஆதரிப்பீர்கள் என தான் நம்புகிறேன். 


2024 மக்களவைத் தேர்தலில் அனைவரும் சேர்ந்து ஒன்றாக பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை ஆதரித்தோம். அதனால் யாருக்கும் லாபமும் இல்லை, நட்டமும் இல்லை. அதே போல இம்முறையும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிக்க வேண்டும். தற்போதைய மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவால் யாருக்கும் பாதகம் ஏற்படாது  உறுதிமொழி வழங்க தயார். நரேந்திர மோடி உத்திரவாதம் அல்லது உறுதிமொழி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டால் அதனையும் நான் வழங்க தயாராக இருக்கிறேன். தமிழில் இதற்கு ஏதேனும் வார்த்தைகள் இருந்தாலும் சொல்லுங்கள், அதனையும் பயன்படுத்தி தான் இந்த அவையில் பேசுகிறேன். தொகுதிகள் மறுவரையறையால் எந்த மாநிலங்களுக்கும் பாதிப்பு இருக்காது.மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தில் மாற்றம் இல்லை. தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது. பெண்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நீங்கள் என்னை எதிர்த்தால் அரசியல் ரீதியாக நான் பலனடைவேன். ஆதரித்தால் யாருக்கும் இங்கே பெயரும் புகழும் கிடைத்துவிடாது. நான் ஓபிஎசி சமுதாயத்தை சேர்ந்தவன்.. அனைவரையும் சமமாகவே மதித்து செல்கிறேன். ஓபிசி சமுதாயத்தை சேர்ந்த எனக்கு வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றி” என்றார்.